Saturday 19 June 2010

நான் பாமரன்...

சிறு கூழாங்கல் தொடங்கி
விரிந்து கிடக்கின்ற ஆல மரம் வரை
எனக்கேயான இயற்கைக்குள் ஒன்றிக்கிடப்பதெல்லாம்
வெறும் பாமரத்தனம்தான்!!!

என் வீட்டுக் கழிவறை வரை
என்னை துரத்தும்
கெட்ட அரசியல் தந்த வேதனையின் விரக்தி....
எனக்கேயான வட்ட விளிம்பு தாண்டி
என் நோக்கு எட்டாத வெகுளித்தனம்...
என்னை அழுத்த துடிக்கும் அதிகாரத்தினை
அடையளம் கண்டு கொண்ட போதும் - ஒரு
நாணல் காட்டும் இசைவு காட்டிக் கூட
தாண்டி வாழமுடியாத ஆன்மம் தரும் இயலாமை...
மட்டுமின்றி...
என்னில் தொடங்கி என்னிலேயே முடிந்து விடும்
சிறு பயணத்தின்
சின்னதான ஒரு சந்தோசம்...
ம்ஹும்,
என்னை பாமரனாய் நான் காண்பதில்
அசாத்தியமில்லைதான்...!!!

தெரியுமெனக்கு...
என் எதிர்மறை உணர்ச்சிகளின் பட்டியல் வெகு நீளம்!!!

ஆனாலும் என்ன??
"நிர்வாணமான சத்தியம்தான் என் வெளிப்பாடு"
என்பதில் தொடங்கி...
"நான் பாமரன்" என்ற முற்றுப்புள்ளி வரை...
தற்பெருமை அதிகம்தான் எனக்கு!!!